கண்டியில் கொரோனா தொற்று அடையாளம்; மேலுமொரு பகுதி முடக்கம்!

கண்டியில் கொரோனா தொற்று அடையாளம்; மேலுமொரு பகுதி முடக்கம்!


கண்டி மாவட்டத்தில் அக்குரணை பகுதியில் உள்ள தெலம்புகஹவத்த மற்றும் புலுகஹதென்ன கிராமங்கள் ஏற்கனவே இன்று காலை முதல் முடக்க நிலையில் உள்ளது.


மேலும் கண்டி, மஹியாவ பிரதேசத்தின் ஒரு பகுதியும் முடக்கப்பட்டு பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக கண்டி மாவட்ட செயலாளர் சந்தன தென்னகோன் தெரிவித்தார்.

                                    

கண்டி மாவட்டத்தில் இன்று (24) 149 கொரோனா தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர் எனவும், அவர்களில் 24 பேர் அக்குரணை பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் 05 பேர் மஹியாவ பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர் தெரிவித்தார்.


$ads={2}


தற்போது, கண்டி மாவட்டத்தில் 528 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன, அதே வீடுகளில் பாதிக்கப்பட்ட குடும்பங்களை தனிமைப்படுத்துவதில் சிக்கல்கள் இருப்பதால் மஹியாவ பகுதியில் உள்ள குடும்பங்கள் மட்டும் ரந்தெனிகல தனிமைப்படுத்தப்பட்ட நிலையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளனர் செயலாளர் மேலும் தெரிவித்தார்.


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post