இன்று தொற்றுக்கு அடையாளம் காணப்பட்டவர்களின் முழு விபரம்!

இன்று தொற்றுக்கு அடையாளம் காணப்பட்டவர்களின் முழு விபரம்!


இன்றைய தினம் (24) நாட்டில் மேலும் 287 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.


அவர்கள் அனைவரும் நோயாளர்களுடன் தொடர்புடையவர்கள் என இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.


இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்று உறுதியானவர்களின் எண்ணிக்கை 20,795 ஆக அதிகரித்துள்ளது.


அத்துடன் தற்போது 5,743 பேர் கொரோனா தொற்றுடன் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.


அதேநேரம் நாட்டில் தொற்றிலிருந்து இன்றைய தினம் மேலும் 465 நோயாளர்கள் குணமடைந்தனர்.


$ads={2}


இதற்கமைய 14,962 பேர் இதுவரையில் இந்த நோய்த்தொற்றில் இருந்து குணமடைந்து சிகிச்சை நிலையங்களில் இருந்து வெளியேறி இருப்பதாக தொற்றுநோய் விஞ்ஞானப் பிரிவு தெரிவித்துள்ளது.


இதேவேளை, பேருவளை பிரதேச சபையின் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.


தார்கா நகரை சேர்ந்த அவர் உள்ளிட்ட மேலும் 83 பேருக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை PCR பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருந்தன.


தர்கா நகரை சேர்ந்த 2 பேருக்கு அண்மையில் கொரோனா தொற்று உறுதியாகியிருந்த நிலையில் இந்த PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.


அந்த பரிசோதனைகளில் 38 பேரின் பெறுபேறுகள் வெளியாகியிருந்த நிலையில் அதில் குறித்த பிரதேச சபை உறுப்பினருக்கு தொற்று உறுதியாகியுள்ளமை தெரியவந்துள்ளது.


மேலும் இலங்கையில் இதுவரை 90 கொரோனா மரணங்கள் உத்தியோகபூர்வமாக பதிவாகியுள்ளன.


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post