தனிமைப்படுத்தலில் இருந்தவர்களுடன் தகராறில் ஈடுபட்டவர்கள் தனிமைப்படுத்தலில்!

தனிமைப்படுத்தலில் இருந்தவர்களுடன் தகராறில் ஈடுபட்டவர்கள் தனிமைப்படுத்தலில்!


தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த நபர்களுடன் ஏற்பட்ட முறுகல் நிலையைத் தொடர்ந்து, நான்கு குடும்பங்களைச் சேர்ந்த 5 பேர் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டுள்ள சம்பவமொன்று யாழ்ப்பாணம் - பருத்தித்துறை பகுதியில் பதிவாகியுள்ளது.


தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த வீடொன்றுக்கு முன்னால் பிறிதொரு குழு விளையாடிக் கொண்டிருந்ததாகவும், இதனையடுத்து இது தொடர்பில் குறித்த வீட்டு உரிமையாளரால் சுகாதார பரிசோதகருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


$ads={2}


இதனையடுத்து, தனிமைப்படுத்தப்பட்டிருந்த வீட்டு உறுப்பினர்களுடன் குறித்த குழு தகராறில் ஈடுபட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.


இவ்வாறு, தனிமைப்படுத்தப்பட்ட குடும்பத்தினருடன் தகராறில் ஈடுபட்ட ஐந்து நபர்களை தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.


முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post