மேல் மாகாணத்தில் நாளை ஊரடங்கு நீக்குவது தொடர்பிலான அறிவிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மேல் மாகாணத்தில் நாளை ஊரடங்கு நீக்குவது தொடர்பிலான அறிவிப்பு!

கொரோனா தொற்றுப் பரவலை ஆராய்ந்த பின்னரே மேல் மாகாணத்தில் அமுலாகும் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தை நீக்குவது குறித்து தீர்மானிக்கப்படும் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

கடந்த 29ஆம் திகதி மேல் மாகாணத்தில் அமுல்படுத்தப்பட்ட தனிமைப்படுத்தல் ஊரடங்குச்சட்டம் நாளை (02) அதிகாலை 5.00 மணிக்கு நீக்குவதென முன்னர் தீர்மானிக்கப்பட்டிருந்தது.

$ads={2}

எனினும், கிடைக்கும் அறிக்கைகளை முறையாகப் பரிசீலித்த பின்னரே உறுதியான தீர்மானத்தை எட்ட முடியுமென்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கம்பஹா, கொழும்பு மாவட்டங்களில் ஆங்காங்கே கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன், இந்தத் தொற்று மேலும் பரவக்கூடுமா என்பதை அவதானிக்க வேண்டுமென்றும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.