கிளினிக்குகளில் பதிவு செய்யப்பட்ட நோயாளிகளுக்கு வீடுகளுக்கே மருந்துகள் அனுப்பி வைக்கப்படும்!

கிளினிக்குகளில் பதிவு செய்யப்பட்ட நோயாளிகளுக்கு வீடுகளுக்கே மருந்துகள் அனுப்பி வைக்கப்படும்!

கிளினிக்குகளில் பதிவுசெய்யப்பட்ட நோயாளர்களின் வீடுகளுக்கு மருந்துகளை விநியோகிக்கும் திட்டம் நேற்று முதல் நாடு முழுவதும் செயல்படுத்த ஆரம்பித்துள்ளதாக தொற்றுநோயில் பிரிவு தெரிவித்துள்ளது.

நாட்டில் தற்போது சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு கொவிட்-19 கொரோனா தொற்று காரணமாக கிளினிக் நோயாளர்களுக்கான மருந்துகளை விநியோகிக்குமாறு சுகாதார அமைச்சினால் விடுத்துள்ள சுற்று நிரூபத் திற்கமைய மருந்து விநியோகம் ஆரம்பிக்கப் பட்டுள்ள தாகத் தொற்று நோய் ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர நேற்று தெரிவித்தார்.


$ads={2}

கிளினிக்குகளில் பதிவுசெய்யப்பட்ட நோயாளர்களின் வீடுகளுக்கு மருந்துகளை விநியோகிக்கும் செயல்முறை நேற்று முதல் நாடு முழுவதும் ஆரம்பிக்கப்பட்டதாக தொற்றுநோயில் பிரிவு தெரிவித்துள்ளது.

நாடளாவிய ரீதியில் இதற்கான நடவடிக்கைகளை நேற்று முதல் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கு முன்னர் கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் மாத்திரம் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டதாக நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தொற்று நோய் ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்திருந்தார் .

கருத்து தெரிவிக்க...

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.