கொரோனா: நாளை கண்டி, மடவளை நகரம் முற்றாக பூட்டு!

கொரோனா: நாளை கண்டி, மடவளை நகரம் முற்றாக பூட்டு!

நாளை (27) கண்டி - மடவளை பிரதேசத்தில் உள்ள அனைத்து விற்பனை நிலையங்களையும் மூடப்படவுள்ளதாக பாததும்பர பிரதேச செயலகம், பிரதேச வைத்திய அதிகாரிகள் மற்றும் மடவளை வர்த்தக சங்கம் முடிவெடுத்துள்ளது.

மடவளை நகரில் அமைந்திருக்கும் விற்பனை நிலையமொன்றில் குறித்த கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதை தொடர்ந்தே இம்முடிவு எட்டப்பட்டுள்ளது.

$ads={2}

குறித்த விற்பனை நிலைய ஊழியர்களுக்கு PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், பரிசோதனை முடிவின் பின்னரே மேலதிக முடிவுகள் எடுக்கப்படவுள்ளகாக வர்த்தக சங்க தலைவர் அல்ஹாஜ். W. M. நஜீம் தெரிவித்தார்.

மேலும் மடவளை மதீனா தேசிய பாடசாலையும் நாளை முதல் மீள் அறிவித்தல் வரும்வரை தற்காலிகமாக மூடப்படுவதாக பாடசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

 

தற்போது பாததும்பர பிரதேசத்தில் நிலவும் கொரோனா நிலைமையை கருத்தில் கொண்டு நாளை எமது பிரதேச பாடசாலைகளை தற்காலிகமாக மூடுமாறு...

Posted by K/ Madina Central College (National School) on Thursday, 26 November 2020

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post