துப்பாகியுடன் பயணிக்கும் நாமல்? இணையத்தில் கசிந்த புகைப்படம்!

துப்பாகியுடன் பயணிக்கும் நாமல்? இணையத்தில் கசிந்த புகைப்படம்!

விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ துப்பாக்கியுடன் பயணிப்பது போன்ற புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வாகனமொன்றை அமைச்சர் செலுத்தும் சந்தர்ப்பத்தில் வாகனக் கதவில் உள்ள கையில் கைத்துப்பாக்கி இருப்பதுபோல புகைப்படமே அதுவாகும்.

எனினும் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தரப்பு இணையத்தளங்கள், இந்தப் புகைப்படம் பற்றிய விளக்கங்களை வெளியிட்டு வருகின்றன.

அதாவது, 6 வருடங்களுக்கு முன்பதாக இப்புகைப்படம் எடுக்கப்பட்டதாகும் என அவரின் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் எந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினருக்கும் அரசாங்க அனுமதியின் கீழ் கைத்துப்பாக்கி ஒன்றை தற்பாதுகாப்புக்காக வைத்திருக்க அனுமதியுள்ளது என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post