ஹொரவ்பொத்தான பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் நிறைவேற்றப்பட்டது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஹொரவ்பொத்தான பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் நிறைவேற்றப்பட்டது!

2021 ஆம் ஆண்டுக்கான ஹொரவ்பொத்தான பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் நேற்று(26) நிறைவேற்றப்பட்டது.

ஹொரவபொத்தான பிரதேச சபையின் தலைவர் சாரு உதயங்க விஜேரத்னவினால் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் நேற்று(26) சபையினருக்கு இரண்டாவது தடவையாக சமர்ப்பிக்கப்பட்டது.


$ads={2}

இதையடுத்து வரவு செலவு திட்டம் மீதான விவாதம் இடம்பெற்றது, இதில் ஆளும் மற்றும் எதிர் கட்சியினர் பல்வேறு நிறைகளைவும், குறைகளையும் சபையில் எடுத்து கூறினார். இவையனைத்தையும் செவிமடுத்த தவிசாளர் ஏகமனதாக ஏற்றுக் கொள்ளவதாக அறிவித்தார்.

மேலும் குறை, நிறைகளை ஏகமனதாக ஏற்றுக்கொள்வதால் 2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் நிறைவேற்றப்படுவதாக சபையில் அறிவித்துவிட்டு இன்று(27) காலை 10 மணி வரை சபை நடவடிக்கைகளை ஒத்திவைத்து சபையிலிருந்து தவிசாளர் உள்ளிட்ட ஆளும் கட்சியினர் எழுந்து சென்றனர்.

பின்னர் எதிர் கட்சியினர் அவ்விடத்திலேயே வரவு செலவு திட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்ட விதம் குறித்து கடும் அதிருப்தி வெளியிட்டு சபையிலிருந்து வெளியேறினர்.

இதேவேளை 2021 ஆம் ஆண்டுக்கான ஹொரவ்பொத்தான பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் கடந்த மாதம் 29 ஆம் திகதி முதற்தடவையாக முன்வைக்கப்பட்ட போது 6 வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது

யாழ் நியூ/ செய்தியாளர் முஹம்மட் ஹாசில் 

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.