கொரொனா அச்சத்தின் உச்சமாக கொழும்பு அடையாளம்!

கொரொனா அச்சத்தின் உச்சமாக கொழும்பு அடையாளம்!

கொழும்பு மாநகர எல்லைக்கு உட்பட்ட பகுதி அதிக கொரோனா அச்சம் மிக்க பகுதியாக அடையாளப் படுத்தப்பட்டுள்ளதாக தொற்று நோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்று, குறித்த பகுதிகளில் ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட போதிலும், அதன் தாக்கம் அதிகரித்தால் மேல் மாகாணம் முழுதும் அதிக ஆபத்து ஏற்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், சமூகத்திற்கு மத்தியில் மாத்திரமல்லாது பல்வேறு நிறுவனங்களிலும் கொரோனா தொற்று ஏற்படுகின்றமையின் ஊடாக கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதில் சிக்கல் ஏற்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

$ads={2}

இதேவேளை, கொரோனா தொற்றின் பரவல், கொழும்பு மாவட்டத்திலிருந்து வெளி மாவட்டங்ளுக்கு பரவுவதை தடுக்க வேண்டும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஷேனால் பெர்ணாண்டோ தெரிவித்துள்ளார்.

இதன்படி, கொரோனா தொற்றை வெளி மாவட்டங்களுக்கு பரவ விடாது,  கொழும்பு மாவட்டத்திற்குள் கட்டுப்படுத்தினால் நாட்டை ஓரளவு சிறந்த நிலைமைக்கு கொண்டுவர முடியும் என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post