கண்டி போகம்பரை சிறைச்சாலையிலிருந்து ஐவர் தப்பியோட்டம்!!!

கண்டி போகம்பரை சிறைச்சாலையிலிருந்து ஐவர் தப்பியோட்டம்!!!

கண்டி, போகம்பறை பழைய சிறைச்சாலையிலிருந்து தப்பியோட முயன்ற கைதிகளுள் ஒருவர் உயிரிழந்ததுடன், மேலும் ஒருவர் காயமடைந்தும் உள்ளார்.


$ads={2}


போகம்பறை சிறைச்சாலையில் இன்று அதிகாலை 5 கைதிகள் தப்பிச் செல்ல முயன்றுள்ளனர். இதன்போது அவர்களை பிடிப்பதற்காக பொலிஸார் துப்பாக்கி சூடும் மேற்கொண்டுள்ளனர்.

எவ்வாறெனினும் தப்பியோட முயன்ற மூன்று கைதிகள் சிக்கியுள்ளதுடன், ஒருவர் தப்பியோடியும் உள்ளார்.

அதேநேரம் சம்பவத்தில் காயமடைந்த கைதி சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகம் காரணமாகவா கைதி உயிரிழந்தார் என்பது தொடர்பில் தெளிவான தகவல்கள் இன்னும் கூறப்படவில்லை.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post