காதல் ஜோடி விபத்தில் பரிதாப மரணம்! கொழும்பில் சம்பவம்!

காதல் ஜோடி விபத்தில் பரிதாப மரணம்! கொழும்பில் சம்பவம்!

கொழும்பு - ஹைலெவல் வீதியில் கடந்த 16ஆம் திகதி மாலை இடம்பெற்ற விபத்தில் இளம் காதல் ஜோடியொன்று சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருந்தனர். 

கொழும்பிலுள்ள தனியார் நிறுவனமொன்றில் பணியாற்றும் ஜோடி பணி முடிந்து மாலை 5.35 மணியளவில் வீடு திரும்பும்போது, ஹைலெவல் வீதி, விஜேராம சந்தி அருகே வைத்து விபத்து இடம்பெற்றது.


$ads={2}


மோட்டார் சைக்கிளில் சென்ற ஜோடி இ.போ.ச பேருந்து ஒன்றை முந்திச் செல்ல முயன்றபோது விபத்து நேர்ந்தது. வீதியின் நடுவிலுள்ள வெள்ளை குறியீட்டு அடையாளத்தின் மேலாக மோட்டார் சைக்கிளை செலுத்தும் போது நிலைதடுமாறு இருவரும் மோட்டார் சைக்கிளுடன் பேருந்து சக்கரத்திற்குள் விழுந்தனர். சம்பவ இடத்திலேயே இருவரும் உயிரிழந்தனர்.


திசால் ஷானக குமாரசிங்க (23) என்ற மத்துகமவை சேர்ந்த இளைஞனும் ஜெயசுந்தர கலணி கங்கா ரஜினி (22) என்ற லுணுவத்த வெலிமடவை சேர்ந்த யுவதியுமே உயிரிழந்தனர்.


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post