தனிமைப்படுத்தல் நீக்கம் தொடர்பாக பொலிஸ் மா அதிபர் வெளியிட்டுள்ள அறிவித்தல்!

தனிமைப்படுத்தல் நீக்கம் தொடர்பாக பொலிஸ் மா அதிபர் வெளியிட்டுள்ள அறிவித்தல்!


மேல் மாகாணத்திலும், குளியாப்பிட்டி மற்றும் எஹலியகொட காவல்துறை பிரிவுகளிலும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் தொடர்வதாக பொலிஸ் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.


எதிர்வரும் திங்கட்கிழமை முதல், புதிய வழமைப்படுத்தல் முறைமைக்கு அமைய அனைவரும் செயற்பட வேண்டும்.


இன்றும், நாளையும் ஊரடங்கு சட்டம் தொடர்பான விதிமுறைகள் தொடர்ந்தும் பிற்பற்றப்படவுள்ளன.


நாட்டிலுள்ள சில பகுதிகள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.


அந்ததந்த பகுதிகளுக்கு பொறுப்பான சுகாதார அதிகாரிகளின் ஆலோசனைகளுக்கு அமைய அது தொடர்பான செயற்பாடுகள் நடைமுறைபடுத்தப்படுகின்றன.


$ads={2}


சில சந்தர்ப்பங்களில் கிராமங்கள், வீடுகள், குடியிருப்பு தொகுதிகள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.


அந்த நடைமுறை தொடர்ந்தும் அவ்வாறே நீடிக்கும் என்று பொலிஸ் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.


இதேநேரம், சுயதனிமைப்படுத்தல் மற்றும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளவர்கள் முழுமையாக அதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.


கருத்து தெரிவிக்க...

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.