கொரோனா பாதிப்பு பற்றி மட்டும் பேச வேண்டாம்; நோய்த் தொற்றாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளது பற்றி பேசுங்கள்! எதிர்கட்சிக்கு டிலான் பெரேரா தெரிவிப்பு!

கொரோனா பாதிப்பு பற்றி மட்டும் பேச வேண்டாம்; நோய்த் தொற்றாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளது பற்றி பேசுங்கள்! எதிர்கட்சிக்கு டிலான் பெரேரா தெரிவிப்பு!


எதிர்க்கட்சிகள் கொரோனா பற்றி மட்டுமே பேசி வருவதாக ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.


அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து கொரோனாவிற்கு எதிராக போராட வேண்டுமே தவிர ஒருவரை ஒருவர் குற்றம் குறை கூறி விமர்சனம் செய்வதில் பயனில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


நாடாளுமன்றில் இன்றைய தினம் எதிர்க்கட்சிகள் அரசாங்கம் மீது சுமத்திய குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளித்து பேசுகையில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.


$ads={2}


எதிர்க்கட்சிகள் கொரோனா பாதிப்பு பற்றி மட்டும் பேசி வருவதாகவும் கடந்த மூன்று வாரங்களில் ஆயிரக்கணக்கான நோய்த் தொற்றாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளது பற்றி பேசப்படுவதில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


ஒப்பீட்டளவில் ஏனைய நாடுகளை விடவும் இலங்கை கொரோனா இரண்டாம் அலையை கட்டுப்படுத்தி வருகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.


வெளிநாடுகளின் நாடாளுமன்றங்கள் ஒன்றிணைந்து கொவிட்டிற்கு எதிராக செயற்படுவதாகவும் இலங்கையிலும் இந்த நிலைமை உருவாக வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post