நேற்றைய நாள் முடிவில் இனம்காணப்பட்ட தொற்றாளர்கள் பற்றிய விபரம்!

நேற்றைய நாள் முடிவில் இனம்காணப்பட்ட தொற்றாளர்கள் பற்றிய விபரம்!


நாட்டில் நேற்றைய தினம் நிறைவில் 373 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.


இவ்வாறு தொற்று கண்டறியப்பட்டவர்கள் அனைவரும் ஏற்கனவே தொற்று கண்டறியப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதன்படி, மினுவாங்கொட மற்றும் பேலியகொட மீன் சந்தை கொரோனா கொத்தணியில் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 12,227 ஆக அதிகரித்துள்ளது.


இந்நிலையில் நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 15,709 ஆக அதிகரித்துள்ளது.


$ads={2}


இதேவேளை, கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து இன்று மட்டும் 470 பேர் வீடுகளுக்குத் திரும்பியுள்ள நிலையில் இதுவரை 10,653 பேர் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர்.


இந்நிலையில், இன்னும் 5,022 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.


இதேவேளை, நாட்டில் இன்று இருவர் கொரோனா தொற்றினால் மரணித்துள்ள நிலையில் மொத்த மரணங்கள் 48 ஆக அதிகரித்துள்ளது.


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post