வெளிச்சத்துக்கு வந்தது டான் பிரசாத் அரங்கேற்றிய நாடகம்! உண்மையில் என்ன நடந்தது?

advertise here on top
Join YazhNews WhatsApp Community

வெளிச்சத்துக்கு வந்தது டான் பிரசாத் அரங்கேற்றிய நாடகம்! உண்மையில் என்ன நடந்தது?


இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி மரணிக்கும் முஸ்லிம்களின் உடலங்களை எரிப்பதில் எதுவித பிரச்சினையுமில்லையென முஸ்லிம் பெண்கள் போன்ற வேடமிட்டவர்களைக் கொண்டு டான் பிரசாத் நாடகம் ஒன்றை அரங்கேற்ற முயற்சி செய்துள்ளமை தோல்வியடைந்துள்ளது.


கூலிக்கு அமர்த்தப்பட்டவர்களைக் கொண்டு அண்மையில் ஜனாஸா அடக்க விவகாரத்தை சிங்கள மொழியில் கடிதம் வெளியிட்டு சர்ச்சையை உருவாக்கியிருந்த CTJ அமைப்பின் அப்துல்  ராசிக்கை விமர்சிப்பதோடு நீதியமைச்சர் அலி சப்ரி இவ்விவகாரத்தில் தலையிடுவதை நிறுத்த வேண்டும் எனவும் எச்சரிக்கும் வகையில் டான் பிரசாத் இந்நாடகத்தை அரங்கேற்ற முனைந்திருந்ததை அவதானிக்கக் கூடியதாக உள்ளது.


$ads={2}


இதில் 'சம்பிரதாய' முஸ்லிம்கள் என இரண்டு பெண்களையும் ஒரு தொப்பியணிந்த ஆணையும் காட்சிப்படுத்தியிருந்த டான் பிரசாத், CTJ ராசிக்கின் செயற்பாடு ஊடாக மீண்டும் தம்மை அரசியல் அரங்கில் முன் நிறுத்த முனைந்துள்ள அதேவேளை, குறித்த நபரின் சிங்கள கடிதத்தினைத் தொடர்ந்தும் ஞானசார, ஆனந்த தேரர் உட்பட பல்வேறு அமைப்புகள் வெளிக்கிளம்பியுள்ளதுடன் பௌத்த பிக்குகள் அலி சப்ரிக்கு எதிரான இனவாத கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.


இந்நிலையில், தமக்குப் பழக்கமுள்ள செய்தியாளர் ஒருவர் ஊடாக ஊடகங்களின் ஒலி வாங்கிகளைப் பொருத்தி, அப்பட்டமான நாடகம் ஒன்றை அரங்கேற்ற இந்நபர் முயன்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.


-சிலோன் முஸ்லீம்


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.