லங்கா பிரீமியர் லீக் தொடரில் இருந்து கிறிஸ் கெய்ல் விலகல்!

லங்கா பிரீமியர் லீக் தொடரில் இருந்து கிறிஸ் கெய்ல் விலகல்!

லங்கா பிரீமியர் லீக் தொடரில் இருந்து கிறிஸ் கெய்ல் விலகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Kandy Tuskers அணிக்காக மேற்கிந்திய தீவுகள் அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரரான கிறிஸ் கெய்ல் தெரிவு செய்யப்பட்டிருந்தார்.

எனினும் அவர் தனிப்பட்ட காரணங்களுக்காக இந்த தொடரில் இருந்து விலகுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

$ads={2}

லங்கா பிரீமியர் லீக் தொடர் எதிர்வரும் 26ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

தொடரின் முதலாவது போட்டியில் Kandy Tuskers மற்றும் Colombo Kings ஆகிய அணிகள் மோதவுள்ளன.

இந்த நிலையில் தற்போது கிறிஸ் கெய்ல் தொடரில் இருந்து விலகியுள்ளமை Kandy Tuskers அணிக்கு பின்னடைவாக அமையும் என சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post