தாய்க்கு கொரோனா!! அதிர்ச்சியில் விஷேட தேவையுடைய மகன் தற்கொலை!

தாய்க்கு கொரோனா!! அதிர்ச்சியில் விஷேட தேவையுடைய மகன் தற்கொலை!

தனது தாய் கொரோனா அறிகுறிகளுடன் களுபோவிலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அதிர்ச்சியில் 25 வயது விஷேட தேவையுடைய மகன்  தற்கொலை செய்து கொண்டுள்ள சோகமான சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.


அவரின் தாய் மகரகமையில் உள்ள மீன் சந்தை கடை ஒன்றில் மீன்வாங்கியிருந்த நிலையில் அந்த கடை ஊழியர்கள் தொற்றுக்குள்ளாகி உள்ளனர்.


$ads={2}


பின்னர் அவர் வீட்டில் இருக்கும் போது கொரோனாவிற்குரிய அறிகுறிகளை காண்பித்துள்ளார். இதனால் நேற்றைய முன்தினம் களுபோவிலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.


தாயை மருத்துவமனைக்கு கொண்டு சென்றதால் மன உளைச்சலுக்குள்ளான மகன்  நேற்று (31) காலை அப்பகுதியில் வசிப்பவர்களால் தூக்கில் தொங்கிய நிலையில் சடலாமாக அயலவர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


விஷேட தேவை கொண்ட மகனை   தனது தாயுடன் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருந்தால் இதுபோன்ற ஒரு துன்பகரமான சம்பவம் நடந்திருக்காது என்று அப்பகுதியில் வசிப்பவர்கள் கூறுகின்றனர்.


கருத்து தெரிவிக்க...

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.