VIDEO: புனித மக்காவின் மஸ்ஜிதுல் ஹரமில் மோதிய கார்! ஓட்டுநர் கைது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

VIDEO: புனித மக்காவின் மஸ்ஜிதுல் ஹரமில் மோதிய கார்! ஓட்டுநர் கைது!


நேற்று (30) இரவு 10.30 மணியளவில் புனித மக்காவில் உள்ள கிராண்ட் மஸ்ஜித் என அழைக்கப்படும் மஸ்ஜிதுல் ஹரமில் வெளிப்புற வாசலில் கார் மோதிய வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகியது.


மஸ்ஜிதின் வெளிப்புற முற்றத்தில் வைக்கப்பட்டுள்ள பிளாஸ்டிக் தடுப்புகள் வழியாக குறித்த கார் ஓட்டுநர் வாகன கட்டுப்பாட்டை இழந்து காரை செலுத்துவதை CCTV கேமரா வீடியோ காட்டுகிறது, இருப்பினும், இந்த சம்பவத்தில் எவ்வித உயிர் சேதமும் ஏற்படவில்லை என்று சவூதி செய்தித்தாள் ஒகாஸ் தெரிவித்துள்ளது.


சமூக ஊடகங்களில் வெளியான வெவ்வேறு வீடியோக்களில் பலர் கிராண்ட் மஸ்ஜிதில் கேட் 89இலிருந்து வாகனத்தை அப்புறப்படுத்தும் காட்சிகள் பதிவாகியிருந்தன. 


$ads={2}


ஓட்டுநர், ஒரு சவூதி குடிமகன் எனவும் அவரை கைது செய்து, அரச வழக்கறிஞரிடம் விசாரணைக்கு அனுப்பப்பட்டதாக கூறப்படுகிறது. 


மேலும் குறித்த ஓட்டுநர் ஒரு உடல்நலம் குன்றிய நிலையில் இருந்ததாக செய்தி வெளியாகியுள்ளது, மேலும் அருகிலுள்ள தெற்கு சதுக்கத்தில் அதிவேகமாக வாகனத்தை செலுத்தி ட்ரிப்ட் செய்ய முற்பட்டதால் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. -yazhnews





Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.