கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மட்டும் 6 கொரோனா மரணங்கள் - காரணம் இது தான்!!!

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மட்டும் 6 கொரோனா மரணங்கள் - காரணம் இது தான்!!!

கொரோனா வைரஸ் பரவலின் இரண்டாவது அலையில் ஏற்பட்ட 10 மரணங்களில் 6 மரணங்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது.

PCR பரிசோதனை மேற்கொள்ளாமையினால் இந்த மரணங்கள் ஏற்பட்டதாக அரச மருத்துவ ஆய்வக விஞ்ஞானிகள் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.


$ads={2}

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளின் PCR பரிசோதனை வைத்திய ஆய்வகத்தின் மூலம் மேற்கொள்ளப்படுவதாகவும் இதனால் தாமதம் ஏற்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதன் காரணமாக நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்க தாமதம் ஏற்படுவதாக அவர் கூறியுள்ளார்.

இதனால் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் உயிரை காப்பாற்றுவதற்கு பாரிய சிக்கலான நிலைமை ஏற்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இரண்டாம் நிலை சிக்கல்களைக் கொண்ட நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் வைத்தியசாலைகளில் PCR பரிசோதனை மேற்கொள்ள கூடிய வசதி இருப்பது அத்தியாவசியமாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சில நேரங்களில் PCR பரிசோதனை மேற்கொள்ளும் வசதி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இருந்திருந்தால், குறித்த 6 பேரின் உயிரை காப்பாற்றியிருக்கலாம் என அவர் கூறியுள்ளார்.

இதனால் இந்த சந்தர்ப்பத்தில் வைத்தியசாலையில் PCR பரிசோதனை முறை ஆரம்பிக்க கூடிய முறை ஒன்றை முன்னெடுக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்

முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post