இன்று அதிகாலை 5 மணியுடன் தனிமைப்படுத்தல் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட பகுதிகள்!!

இன்று அதிகாலை 5 மணியுடன் தனிமைப்படுத்தல் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட பகுதிகள்!!

மேல் மாகாணத்தின் சில இடங்கள் இன்று (23) அதிகாலை 5.00 மணியுடன் தனிமைப்படுத்தல் கட்டுப்பாடுகளில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.

கொழும்பு மாவட்டத்தில் வனாத்துமுல்லை கிராம சேவகர் பிரிவைத் தவிர்ந்த பொரளை பகுதி, வெல்லம்பிட்டி, கொழும்பு கோட்டை, வாக்கந்தையைத் தவிர்ந்த கொம்பனித்தெரு பகுதி என்பன தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.

எனினும், மட்டக்குளிய, முகத்துவாரம், புளுமெண்டல், கொட்டாஞ்சேனை, கிராண்ட்பாஸ், கரையோர பகுதி, ஆட்டுப்பட்டித்தெரு, மாளிகாவத்தை, தெமட்டகொடை, வாழைத்தோட்டம், மருதானை, டேம்வீதி, புறக்கோட்டை முதலான பகுதிகள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

$ads={2}

இதேவேளை, கம்பஹா மாவட்டத்தில் கடவத்தை மற்றும் ஜா-எல ஆகிய பொலிஸ் அதிகார பகுதிகளும் இன்று அதிகாலை தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.

எனினும், நீர்கொழும்பு, ராகம, வத்தளை, பேலியகொடை, களனி முதலான பகுதிகளில் தனிமைப்படுத்தல் தொடர்வதாக கொரொனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, களுத்துறை மாவட்டத்தில் சில கிராம சேவகர் பிரிவுகள் நேற்று முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில், பண்டாரகம பொலிஸ் அதிகார பிரிவில், போகாவத்தை, கிரிமன்குடாவ, கொரவலை, அட்டுலுகம, கலகஹமண்டிய, பமுனுமுல்ல மற்றும் பமுனுமுல்லை கிராம சேவகர் பிரிவு முதலான கிராம சேவகர் பிரிவுகள் தற்போது முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post