57-4386 இலக்க வேனை நாட்டின் எப்பகுதியில் கண்டாலும் உடன் தெரியப்படுத்தவும்! -ஏறாவூர் நஸீர்

57-4386 இலக்க வேனை நாட்டின் எப்பகுதியில் கண்டாலும் உடன் தெரியப்படுத்தவும்! -ஏறாவூர் நஸீர்


57-4386
இலக்க வேனை நாட்டின் எப்பகுதியில் கண்டாலும் உடன் தெரியப்படுத்துமாறு ஏறாவூரை சேர்ந்த நசீர் தெரிவித்துள்ளார்.


ஏறாவூரை சேர்ந்த சகோதரர் ஒருவரது டொல்பின் வேனை, கிழக்கு மாகாண விவசாய அமைச்சின், உற்பத்தி திறன் திணைக்களத்திற்கு மாதாந்த வாடகைக்கு தருமாறு, 191 ஹுதா பள்ளி வீதி, அட்டாளைச்சேனையை சேர்ந்த அலியார் முகம்மது சத்தூன் ( 870672745V) என்பவர்,

மிகவும் இலாவகமாக பேசி, திருகோணமலை, மாகாண சபை வளாகத்துக்கே வரும்படி கூறி,

வேனின் ஆவணங்களை திணைக்களத்துக்கு முன்பாகவே வைத்து வாங்கிக்கொண்டு உள்ளே செல்வது போல் நடித்து, பின்னர் உங்கள் வேனை திணைக்களத்திற்கு பாரப்படுத்த எல்லாம் வேலையும் முடித்துவிட்டேன், இனி மாதா மாதம் உங்கள் கணக்குக்கு திணைக்களத்தினால் பணம் வரும் என்று கூறி, வேனை தந்து விட்டு, கார் ஒன்றை ஹயர் பண்ணித் தருகிறேன், அதில் வீடு செல்லுங்கள் என்றதும், அவ்வாறே வேனை ஒப்படைத்துவிட்டு வீடு வந்துள்ளனர்.


$ads={2}


மாதம் ஒன்றாகியதால், குறித்த நபரோடு தொடர்பை ஏற்படுத்திய போது தொலைபேசி வேலை செய்யாததால், கவலையடைந்த இவர்கள், குறித்த நபர் பற்றி, விசாரணையில் ஈடுபட்ட போதுதான், இவன் ஏமாற்றுப் பேர்வழி என்பது தெரியவந்துள்ளது.


வேனை இழந்த சோகத்தில் இக் குடும்பம் இருப்பதால் தயவு செய்து இதனை கூடுதலாக பகிர்ந்து, வேன் எங்கு இருக்கிறது என்பதை கண்டறிய உதவுங்கள்.


தொடர்புகளுக்கு : 0777401458 / 0753803369


-ஏறாவூர் நஸீர்
கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post