சுகாதார ஊடக செய்தித் தொடர்பாளர் பதவி விலக்கியமை தொடர்பாக சுகாதார அமைச்சரின் தெளிவுபடுத்தல்!

சுகாதார ஊடக செய்தித் தொடர்பாளர் பதவி விலக்கியமை தொடர்பாக சுகாதார அமைச்சரின் தெளிவுபடுத்தல்!


சுகாதார அமைச்சின் ஊடக செய்தித் தொடர்பாளர் பதவியில் இருந்து வைத்தியர் ஜயருவன் பண்டார தானாக முன்வந்து இராஜினாமா செய்துள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்தார்.


சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் நியமிக்கப்படும் வரை தற்காலிக அடிப்படையில் அவருக்கு இந்த பதவி வழங்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.


$ads={2}


புதிய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் நியமிக்கப்பட்ட பின்னர் அவர் தனது சொந்த அறிக்கையை ஊடகங்களுக்கு தெரிவிப்பதாகவும், அவர் ஊடக செய்தித் தொடர்பாளர் பதவியில் இருந்து தானாக முன்வந்து இராஜினாமா செய்வதாகவும் ஜயருவன் பண்டாரவுக்கு தெரிவித்ததாக அவர் கூறினார்.


நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக அமைச்சர் இந்த கருத்துக்களை தெரிவித்தார்.


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post