30க்கும் மேற்பட்ட வீடுகளின் சுவர்களிலும் திடீர் வெடிப்பு; மாத்தளையில் சம்பவம்!!

30க்கும் மேற்பட்ட வீடுகளின் சுவர்களிலும் திடீர் வெடிப்பு; மாத்தளையில் சம்பவம்!!

மாத்தளை - தொறக்கும்புற கிராம சேவை பிரிவுக்குட்பட்ட துணுக்கோலவத்த கிராமத்தில் வீடுகளில் சுவர்களிலும் தரைகளிலும் திடீரென பாரிய வெடிப்பு காணப்படுவதாக மாத்தளை பிரதேச செயலாளர் காரியாலயத்தில் பிரதேசவாசிகள் முறைப்பாடு செய்து வருகின்றனர்.

சுமார் 30ற்கும் மேற்பட்ட வீடுகளில் இவ்வாறு வெடிப்புகள் ஏற்பட்டுள்ளதாக மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

இதனையடுத்து கிராம சேவை அதிகாரி ஊடாக தற்போது தகவல்கள் திரட்டப்பட்டு வருகின்றது.

$ads={2}

இதற்கான ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் செயலாளர் காரியாலயம் மற்றும் கட்டிட ஆராய்ச்சி காரியாலயத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

மேலும் இப்பிரதேசத்தில் நிலத்திற்கு கீழ் சுண்ணாம்புக்கல் காணப்படுவதாகவும் நிலத்தடி நீர் பிரவாகம் இப்பகுதியில் ஊடாக செல்வதாலும் இவ்வாறான பாதிப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் காணப்படுவதாக சுட்டிக்காட்டிய ஆராய்ச்சி நிலையத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post