குருணாகல் மாவட்டத்தில் 2000 இற்கும் மேற்பட்டோர் தனிமைபடுத்தலில்!

குருணாகல் மாவட்டத்தில் 2000 இற்கும் மேற்பட்டோர் தனிமைபடுத்தலில்!

குருணாகல் மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவலின் காரணமாக இதுவரை 2,452 குடும்பங்கள் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்டச் செயலாளர் ஆர்.எம்.ஆர்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,


$ads={2}

இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கு 10 ஆயிரம் ரூபா பெறுமதியான அத்தியாவசியப்பொருட்கள் அடங்கிய பொதிகளை விநியோகிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

குருணாகல் நகராட்சி எல்லைகளிலும், குளியாபிட்டிய பொலிஸ் பிரிவிலும் தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது, மேலும் கிரியுல்ல பகுதியும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

தற்பொழுது நாடு முழுவதும் 63,600 க்கும் மேற்பட்ட நபர்கள் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post