வாழைச்சேனையில் ஜும்மா சென்ற 200 நபர்களுக்கு PCR பரிசோதனை!

வாழைச்சேனையில் ஜும்மா சென்ற 200 நபர்களுக்கு PCR பரிசோதனை!

வாழைச்சேனை கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகப் பிரிவுக்கு உட்பட்ட வாழைச்சேனை முகைதீன் ஜும்ஆப் பள்ளிவாசலில் கடந்த மாதம் 23 ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகையில் கலந்து கொண்ட சுமார் 200 பேருக்கு இன்று (7) சனிக்கிழமை பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.


$ads={2}


இந்தப் பகுதியில் முதன்முதலில் இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களில் ஒருவர் குறித்த பள்ளிவாசலில் அன்றைய தினம் தொழுகையில் ஈடுபட்டதை தொடந்து பள்ளிவாசலுக்கு வருகை தந்தவர்களை அடையாளம் கண்டு சுகாதாரப் பிரிவினர் தனிமைப்படுத்தி வைத்தனர்.

இந்தவகையில், வாழைச்சேனை மத்தி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் வைத்து சுமார் 200 பேருக்கு இன்று பீ.சீ.ஆர்.பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. (Madawala News)

கருத்து தெரிவிக்க...

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.