மினுவாங்கொடை - பேலியகொடை கொரோனா கொத்தணி 16,000 ஐ கடந்தது!

மினுவாங்கொடை - பேலியகொடை கொரோனா கொத்தணி 16,000 ஐ கடந்தது!

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இன்று (21) 487 பேர் இலக்காகியிருப்பதாக கோவிட் -19 பரவுவதைத் தடுப்பதற்கான தேசிய நடவடிக்கை மையம் தெரிவித்துள்ளது.

ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு இலக்காகியவர்களுடன் தொடர்புடைய நபர்களுக்கே இன்று வைரஸ் தொற்றுக்கு இலக்கானவர்கள் என இனங்காணப்பட்டதாக மையம் தெரிவித்துள்ளது.


$ads={2}


இன்று, மினுவங்கொடை மற்றும் பெலியகொடை பகுதிகளில் பரவத் தொடங்கிய கொரோனா கொத்தணியின் மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 16,252 ஆக உயர்வடைந்துள்ளது.

இலங்கையில் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 19,771 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றிலிருந்து குணம் அடைந்த நோயாளிகளின் எண்ணிக்கை 13,590 ஆகவும், தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 6,107 ஆகவும் காணப்படுகின்றது.
முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post