ஓரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் நஞ்சருந்தியதில் 16 வயது யுவதி பலி!!

ஓரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் நஞ்சருந்தியதில் 16 வயது யுவதி பலி!!

திருகோணமலை ஆனந்தபுரி பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் நஞ்சருந்தியதில் 16 வயது யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக திருகோணமலை பொது வைத்தியசாலையின் பேச்சாளரொருவர் தெரிவித்தார்.

நஞ்சருந்திய தாய் உட்பட 4 பேரையும் இன்று (06) முற்பகல் 9.30 மணியளவில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதித்துள்ள நிலையில் 16 வயது யுவதி உயிரிழந்துள்ளதாக தெரிய வருகின்றது.

$ads={2}

இதில் திருகோணமலை ஆனந்தபுரி பகுதியைச் சேர்ந்த தாயார் (31) அவரது 12, 08 வயது மகள்கள் மற்றும் 02 வயது மகன் ஆகியோர் திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

நஞ்சு அருந்துவதற்குரிய காரணம் எதுவும் தெரியவில்லை எனவும் ஆலய அர்ச்சகர் ஒருவரின் குடும்பமே இவ்வாறு தற்கொலைக்கு முயன்றுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணை மூலம் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை உப்புவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

கருத்து தெரிவிக்க...

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.