புதிதாக 10 பல்கலைக்கழகங்களை அமைக்க கல்வியமைச்சு தீர்மானம்!

புதிதாக 10 பல்கலைக்கழகங்களை அமைக்க கல்வியமைச்சு தீர்மானம்!

நாடளாவிய ரீதியில் புதிதாக 10 பல்கலைக்கழகங்களை அமைப்பதற்கு கல்வியமைச்சு தீர்மானித்துள்ளது.

அரசாங்கத்தின் புதிய கல்விக் கொள்கைக்கு அமைவாக பிரதேச ரீதியாக குறித்த பல்கலைக்கழகங்களை அமைப்பது தொடர்பான கலந்துரையாடல் கல்வி அமைச்சில் நேற்று (12) இடம்பெற்றது.

$ads={2}

கல்வியமைச்சர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் தலைமையில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில் பல்கலைக்கழகங்கள் இல்லாத மாவட்டங்களில் புதிய பல்கலைக்கழகங்களை அமைப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும் குறித்த பல்கலைக்கழகங்களை அமைப்பதற்கான அமைச்சரவை அனுமதியை பெற்றுக்கொள்வது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post