James Bond ஜேம்ஸ் பாண்ட் நடிகர் ஷான் கானரி காலமானார்!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

James Bond ஜேம்ஸ் பாண்ட் நடிகர் ஷான் கானரி காலமானார்!!


பிரபல ஹாலிவுட் நடிகர் ஷான் கானரி தனது 90ஆவது வயதில் காலமானார்.


ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தில் முதன்முதலில் திரையில் நடித்த நடிகர் ஷான் கானரி, மொத்தம் 7 ஜேம்ஸ் பாண்ட் படங்களில் நாயகனாக நடித்துள்ளார். ஹாலிவுட்டின் மூத்த நடிகர்களில் ஒருவரான கானரி 'தி அண்டச்சபிள்ஸ்' திரைப்படத்தில் நடித்ததற்காகச் சிறந்த உறுதுணை நடிகருக்கான ஆஸ்கர் விருதை வென்றார். மேலும் 2 பாஃப்தா விருதுகள், 3 கோல்டன் குளோப் விருதுகளையும் வென்றுள்ளார்.


40 வருடங்களுக்கும் மேலாக நடித்து வரும் கானரிக்கு, 'இண்டியானா ஜோன்ஸ்’ திரைப்படத்தின் மூன்றாம் பாகம், 'தி ஹண்ட் ஃபார் தி ரெட்' அக்டோபர், 'தி ராக்' உள்ளிட்ட திரைப்படங்கள் சர்வதேச அளவில் புகழைத் தேடித் தந்தன.


$ads={2}


கடந்த ஆகஸ்ட் மாதம் கானரி தனது 90ஆவது பிறந்த நாளைக் கொண்டாடினார். இவருக்கு ஜேஸன் கானரி என்கிற ஒரு மகன் மட்டும் உள்ளார். அவரும் நடிகர் மற்றும் இயக்குநராகப் பணியாற்றி வருகிறமை  குறிப்பிடத்தக்கது.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.