ரிஷாட் இருக்கும் இடத்தை CIDயினர் எப்படி மோப்பம் பிடித்தனர்; தகவல் வெளியாகியது!

ரிஷாட் இருக்கும் இடத்தை CIDயினர் எப்படி மோப்பம் பிடித்தனர்; தகவல் வெளியாகியது!


இன்று கைது செய்யப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் பதுங்கியிருந்த வீடுகளில் இருக்கும் CCTV கமராக்களை பொலிசார் ஆய்வு செய்து வருகின்றனர்..


கடந்த 06 நாட்களாக பொலிசார் ரிஷாட் பதியுதீனைத் தேடிய நிலையில், இன்று (19) அதிகாலை 3.30 மணியளவில், தெஹிவளையில் வைத்து கைது செய்யப்பட்டார்.


அவர் தற்போது, குற்றப்புலனாய்வு பிரிவில் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்ட பின்னர், கோட்டை நீதவான் நீதிமன்று முன்னிலையில் ஆஜர் படுத்தப்பட்ட நிலையில், எதிர்வரும் ஒக்டோபர் 27ஆம் திகதி வரை தடுப்புக்காவலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.


அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், கடந்த புதன், வியாழக்கிழமைகளில் களுபோவில வைத்தியசாலைக்கு அண்மையில் வைத்தியர் ஒருவரின் வீட்டில் தங்கியிருந்துள்ள விடயம் தெரிய வந்துள்ளது.


$ads={2}


வியாழக்கிழமை பிற்பகல் அங்கிருந்து வெளியேறி, தெஹிவளை நகரசபை அருகிலுள்ள மரிக்கார் என்பவரின் வீட்டில் தங்கியருந்தார், இன்று அதிகாலை வரை அங்கேயே அவர் தங்கியிருந்தார்.


ரிஷாட் பதியுதீனை மறைத்து வைக்க உதவினார் என்ற குற்றச்சாட்டில் களுபோவில வைத்தியசாலை வைத்தியரும் கைது செய்யப்பட்டுள்ளார்.


ரிஷாட் பதியுதீனின் தொலைபேசி சிக்னல்களை அடிப்படையாக வைத்தே அவரது இருப்பிடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


தனக்கு நெருக்கமானவர் ஒருவரின் பெயரில் வாங்கிய சிம் அட்டையையே ரிஷாட் கடந்த சில தினங்களாக பாவித்து வந்துள்ளார்.


ரிஷாட்டின் நெருங்கியவர்களை கடந்த சில தினங்களாக CIDயினர் விசாரணை நடத்தியதில், புதிய சிம் அட்டை குறித்த தகவல் வெளியாகியிருந்தது, அதனடிப்படையில் அவர் இன்று கைது செய்யப்பட்டார்.
கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post