Brandix நிறுவனத்தில் கொரோனா நெருக்கடி; முஸ்லிம்களால் பரப்பப்பட்டதா?

advertise here on top
Join YazhNews WhatsApp Community

Brandix நிறுவனத்தில் கொரோனா நெருக்கடி; முஸ்லிம்களால் பரப்பப்பட்டதா?


-Farsan

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா நெருக்கடியில் அந்த தொற்றை விட அது எங்கிருந்து வந்தது என்ற செய்திக்கு முன்னுரிமை வழங்கப்படுவதை அவதானிக்கும் போது, இம்முறையும் கொரோனா முஸ்லிம்களால் பரப்பப்பட்டது என்ற கருத்து சமூக மயப்படுத்தபடுகிறதோ என்று தோன்றுகிறது. 


Brandix நிறுவனத்தின் பொறுப்பற்ற தனத்தால் தான் இந்த வைரஸ் பரவியது என அந்த நிறுவனத்தின் தலைமை காரியாலயத்துக்கு முன்னால் நின்று இந்த நிறுவனத்தின் முக்கிய அதிகாரிகளை ஒரு சிங்கள பெண் சத்தமாக திட்டும்  வீடியோ ஒன்று நேற்று சில இனவாத ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டது. 


வீட்டில் தனிமை படுத்ததலில் இருக்க வேண்டியவர்களை இந்த நிறுவன அதிகாரிகள் வேலைக்கு நிர்ப்பந்தித்து அழைத்ததாக அந்த பெண் குற்றம் சாட்டுவதை வீடியோவில் கேட்கமுடிகிறது. 


Brandix இலங்கைக்கு வெளியில் மிகவும் அறியப்பட்ட இலங்கை  முஸ்லிம்களால் நடத்தப்படும் ஓர் ஆடை தொழிற்சாலை; இந்த நிறுவனத்தில் 60 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் வேலை செய்கிறார்கள்; ஆண்டுதோறும் பில்லியன் காணக்காண ஏற்றுமதி வருமானத்தை ஈட்டித்தரும் நிறுவனம் இது; அஷ்ரப் உமர் இதன் நிறைவேற்று பணிப்பாளர்; இவர்களின்  குடும்பத்தினரால் சுமார் 50 ஆண்டுகளாக இந்த நிறுவனம் வளர்க்கப்பட்டு வந்துள்ளது. 


$ads={2}


இறைச்சி வியாபாரத்தை கூட முஸ்லிம்களிடம் இருந்து பிடுங்க வேண்டும் என்று நினைப்போர் இந்த நிறுவனத்தின் மீது கண் வைத்திருக்க மாட்டார்கள் என்று எண்ணுவது ஆச்சரியம் இல்லை.


இந்த கொரோனா பரவல் அதனால் ஏற்பட்ட செலவுகளுக்கு இந்த நிறுவனத்தை பொறுப்பேற்கும் படியும், அரசாங்க செலவுக்கு நட்ட ஈடு வழங்கும் படியும் உத்தரவிட்டாலே நாளை Brandix அதன் இன்றைய உரிமையாளர்களின் கையில் இருக்காது.


இலங்கையர்கள் கொரோனா பற்றி  ஜோக் ஷெயார் செய்து மகிழும் தருணத்தில் இனவாதிகள் இறைச்சிக்கு அடுத்து இன்னொரு கணக்கையும் போடுகிறார்களோ என்ற சந்தேகம் எழுவதை தவிர்க்க முடியவில்லை.


$ads={2}


-Jaffna Muslim


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.