மக்களின் வாழ்வாதாரத்திற்கு ஏற்பட்டுள்ள பிரச்சினையை மூடி மறைப்பதற்காக கொரோனா பிரச்சினை?

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மக்களின் வாழ்வாதாரத்திற்கு ஏற்பட்டுள்ள பிரச்சினையை மூடி மறைப்பதற்காக கொரோனா பிரச்சினை?


திவுலபிட்டியவில் ஏற்பட்டுள்ளதாக கூறப்படும் கொரோனா கொத்தணி உண்மையா பொய்யா என்பது மக்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹஷீம் தெரிவித்துள்ளார்.


இன்று வரையில் மக்களின் வாழ்வாதாரத்திற்கு ஏற்பட்டுள்ள பிரச்சினையை மூடி மறைப்பதற்காக கொரோனா பிரச்சினையை ஏற்படுத்தியுள்ளதாக மக்கள் சந்தேகிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.


இம்முறை கொரோனா பரவல் குறித்து கூறும் போது அது குறித்து மக்களுக்கு அவநம்பிக்கை ஏற்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.


எப்படியிருப்பினும் இது உண்மை என்றால் எதிர்கட்சி என்ற ரீதியில் அதனை கட்டுப்படுத்துவதற்கு முழுமையான ஆதரவை வழங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.


எதிர்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று (06) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.


இதேபோன்று, தற்சமயம் நாட்டுக்குள் உண்மைக்கு புறம்பான நிலை உருவாகி வருவதாக எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசபுத்தளம் பகுதியில் நடந்த நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.