இலங்கையில் கடந்த சில மாதங்களாக கொரோனா சமூகத்தினுள் காணப்பட்டதாக தெரிவித்த வைத்தியர் பதவி அகற்றப்பட்டார்!

இலங்கையில் கடந்த சில மாதங்களாக கொரோனா சமூகத்தினுள் காணப்பட்டதாக தெரிவித்த வைத்தியர் பதவி அகற்றப்பட்டார்!


இலங்கையின் மருத்துவ ஆராய்ச்சி நிலையத்தின் இயக்குநர் வைத்தியர் ஜயருவான் பண்டார அந்த பதவியிலிருந்து அகற்றப்பட்டுள்ளார்.


ஜயருவான் பண்டார பதவியிலிருந்து நீக்கப்பட்டமை சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாரச்சியின் உத்தரவின் பேரில் இடம்பெறவில்லை முக்கிய வட்டாரங்கள் தெரிவித்தன என 'எக்கனமி நெக்ஸ்ட்' செய்தி வெளியிட்டுள்ளது.


இந்த விவகாரம் குறித்து சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாரச்சி அறிக்கையொன்றை வெளியிடுவார் என அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.


பதவியிலிருந்து அகற்றப்பட்டுள்ள மருத்துவர் ஜயருவான் பண்டார தொலைக்காட்சியொன்றிற்கு வழங்கிய பேட்டியில் இலங்கையில் கடந்த சில மாதங்களாக கொரோனா சமூகத்தினுள் காணப்பட்டது என தெரிவித்திருந்தார்.


கடந்த சில மாதங்களாக கொரோனா வைரஸ் சமூத்தில் காணப்பட்டது எனநேற்றைய முன்தினம் காலை தனியார் தொலைக்காட்சிக்கு தெரிவித்திருந்த அவர் சுகாதாரஅதிகாரிகள் இனம் கண்டவற்றிற்கு வெளியே கொரோனா வைரஸ் காணப்பட்டது என குறிப்பிட்டுள்ளார்.


அந்த நிலையில் ஆபத்து காணப்பட்டது என அவர் குறிப்பிட்டிருந்தார்.


ஜனவரி முதல் இந்த வைரஸ் எப்படியோ சமூகத்தில் காணப்பட்டது எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.


சமூகத்திற்குள் ஏற்கனவே நோயாளிகள் இருந்திருக்காவிட்டால் புதிய நோயாளியொருவர் கண்டுபிடிக்கப்படுவதற்கான சூழ்நிலை ஏற்பட்டிருக்காது என மருத்துவர் தெரிவித்திருந்தார்.


முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post