கொரோனா வைரஸ் தொற்றினால் ஏற்பட்ட நெருக்கடி நிலையின் காரணமாக வெகுவாகப் பாதிக்கப்பட்ட சுற்றுலாத்துறையுடன் தொடர்புடைய தொழில் முயற்சியாளர்களுக்கு வழங்கப்பட்டுவந்த மானிய உதவிகளை நீடிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதன்படி இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் கண்காணிப்பின் கீழ் அல்லது வேறு சுற்றுலாத்துறை சங்கங்களால் பயிற்றுவிக்கப்பட்ட சுற்றுலா சாரதிகள், சுற்றுலா பஸ் சாரதிகள், உதவியாளர்கள், சுற்றுலாத்துறைசார் முச்சக்கரவண்டி சாரதிகள் மற்றும் சஃபாரி ஊர்தி சாரதிகளுக்கு ஒருமுறை மாத்திரம் 15,000 ரூபாவை வழங்கப்படவுள்ளது.
மேலும் இலங்கை சுற்றுலாத்துறை அபிவிருத்தி அதிகார சபையில் பதிவு செய்த, மாகாண சபையால் பயிற்றுவிக்கப்பட்ட சுற்றுலா வழிகாட்டுனர்களுக்காக ஒருமுறை மாத்திரம் 20,000 ரூபாவை வழங்குவதற்கும் அரசாங்கத்தினால் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
$ads={2}