தெஹிவலை மீன் விற்பனையில் ஈடுபட்டு வந்த பெண்ணுக்கு கொரோனா!

தெஹிவலை மீன் விற்பனையில் ஈடுபட்டு வந்த பெண்ணுக்கு கொரோனா!


தெஹிவளை – கரகம்பிட்டிய பகுதி வாராந்த சந்தையில் மீன் விற் பனையில் ஈடுபட்டு வந்த பெண் ஒருவர் கொரோனா தொற்றாளராக இனங்காணப்பட்டுள்ளார்.

இரத்மலானை – கதவல வீதியில் சதுன்கம பகுதியைச் சேர்ந்த 63 வயதான பெண் ஒருவர் காய்ச்சல் மற்றும் இருமல் காரணமாக களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பரிசோதனை மேற்கொண்ட போது கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்டதை அடுத்து குறித்த பெண் ஐ.டி.எச் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

தெஹிவளை – கரகம்பிட்டிய பகுதியில் வாராந்த சந்தையில் மீன் விற்பனையில் ஈடுபட்ட பெண்ணே இவ்வாறு கொரோனா தொற்றாளராக இனங்காணப்பட்டவர் என்றும் குறித்த பெண்ணிடமிருந்து மீன் கொள்வனவு செய்தவர்கள் இருந்தால், அவர்கள் வைத்திய ஆலோசனை பெற்றுக்கொள்ளுமாறும் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post