ஈஸி கேஷ் பண மோசடி - மக்களே அவதானம்!

ஈஸி கேஷ் பண மோசடி - மக்களே அவதானம்!


பொலிஸ் உத்தியோகஸ்தர்களாக தம்மை அடையாளப்படுத்தி பிரதேச வர்த்தகர்களிடம் பணமோசடி செய்யும் குழு தொடர்பில் தகவல்கள் கிடைத்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இலகுவழி பணப் பரிமாற்றல் (ஈஸி கேஷ்) ஊடாக இந்த மோசடிகள் இடம்பெறுகின்றது.

குறிப்பாக வீரக்கெட்டிய, ஹோமாகம மற்றும் மொரகஹஹேன ஆகிய பகுதிகளில் இவ்வாறு பண மோசடிகள் அண்மை தினமாக பதிவாகியுள்ளதுடன் , பணம் அனுப்பாட்ட தொலைப்பேசி இலக்கங்கள் ஊடாக விசாரணைகளை பொலிசார் ஆரம்பித்துள்ளனர்.

இவ்வாறு இலகுவழி பணப் பரிமாற்றல் (ஈஸி கேஷ்) சேவைகள் ஊடாக பண மோசடிகளில் ஈடுபடுபவர்கள் குறித்து எச்சரிக்கையுடன் செயற்படுமாறு மக்களிடம் பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.
முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post