மன்னாரில் சில பகுதிகள் முடக்கம்!

மன்னாரில் சில பகுதிகள் முடக்கம்!


மன்னார், பட்டித்தோட்டம் மற்றும் பெரியகடை ஆகிய பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.


மன்னாரில் கடந்த இரு நாட்களில் ஆறு பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.


மன்னார் ஆயர் இல்லத்தில் பணியாற்றிய கட்டடத் தொழிலாளி ஒருவருக்கு கொரோனா தொற்று உள்ளமை இரண்டு நாட்களுக்கு முன்னர் கண்டறியப்பட்டது.


இதனையடுத்து அவருடன் பணியாற்றிய ஏனையவர்கள் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் அவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் ஐந்து பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டது. இவர்கள் கட்டத் தொழிலாளியுடன் நெருங்கிப் பழகியவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


$ads={2}


இந்நிலையில், மன்னார் மாவட்டத்தில் வைரஸ் தொற்று கண்டறியப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஆறாக உயர்ந்துள்ள நிலையில் கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் தற்போது தொற்று கண்டறியப்பட்ட பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.


முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post