கொரோனாவை கட்டுப்படுத்த மருந்து இலங்கையில்!! மருத்துவமனைகளில் பயன்படுத்த அரச ஒப்புதல்!!

கொரோனாவை கட்டுப்படுத்த மருந்து இலங்கையில்!! மருத்துவமனைகளில் பயன்படுத்த அரச ஒப்புதல்!!

அரசு மருத்துவமனைகளில் கொரொனா நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நோயைக் கட்டுப்படுத்த உள்ளூர் ஆயுர்வேத மருந்துகளைப் பயன்படுத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

இந்நிலையில், கொரொனா நோயாளிகளுக்கு மூலிகைகலினால் ஆன ஆயுர்வேத மருந்துகளை வழங்குவதற்கான ஆரம்ப ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது.

அதன்படி, கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உள்ளூர் மருத்துவத்திலும் ஆயுர்வேதத்திலும் நீண்ட காலமாகப் பயன்படுத்தப்பட்டு வரும் 'சுதர்ஷன பானி' எனும் மூலிகை மருந்தை பயன்படுத்த முடிவு செய்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்தார்.

$ads={2}

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க 
இந்த மருந்து பொருத்தமானது என மேற்கத்திய மருத்துவ அறிவியல் மேற்கொண்ட சோதனைகள் மூலம் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

இந்நிலையில், கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டவர்களை ஆயுர்வேத மருத்துவமனைகளில் அனுமதித்து சிகிச்சை அளிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார். 

நேற்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார். -yazhnews

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post