ஜேர்மனி மற்றும் பிராண்ஸ் ஒரு மாதத்திற்கு முடக்கம்!

ஜேர்மனி மற்றும் பிராண்ஸ் ஒரு மாதத்திற்கு முடக்கம்!

ஜெர்மனி, கிருமித்தொற்றைக் கட்டுப்படுத்தும் புதிய நடவடிக்கைகளை அறிவித்துள்ளது.

ஒரு மாதம் நீடிக்கக்கூடிய பகுதிமுடக்கம் வரும் திங்கள் முதல் அமுலாகவுள்ளது. பிராண்சும் வரும் வெள்ளி முதல் நான்கு வார முடக்கத்திற்கு தயாராகி வருகின்றது. 

$ads={2}

ஜெர்மனியில் தனிப்பட்ட வகையில் வரும் திங்கட்கிழமை முதல், பத்துப் பேர் மட்டுமே ஒன்றுகூடமுடியும்.

அதிகபட்சம் இரண்டு குடும்பங்களைச் சேர்ந்தவர்களாக அவர்கள் இருக்கலாம்.

ஜெர்மனியில் உள்ள உணவகங்கள், மதுபானக் கூடங்கள், திரையரங்குகள், நீச்சல் குளங்கள், உடற்பயிற்சிக் கூடங்கள் ஆகியவை மூடப்படும்.

விளையாட்டு நிகழ்ச்சிகள் பார்வையாளர்களின்றி நடைபெற அனுமதிக்கப்படும்.

புதிய நடவடிக்கைகளின்படி, பள்ளிகளும் பகல்நேரப் பராமரிப்பு நிலையங்களும் திறந்திருக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சமூக இடைவெளி, சுகாதார விதிமுறைகளைப் பின்பற்றும் கடைகள் திறந்திருக்க அனுமதிக்கப்படும்

புதிய கட்டுப்பாடுகளால் பாதிக்கப்பட்டோருக்கு ஜெர்மானிய அரசாங்கம் நிவாரண நிதி வழங்கவுள்ளது. மொத்தமாக அங்கு, 479,000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post