இயந்திர கோலாறு காரணமாக சுமார் 20,000 PCR சோதனைகள் தாமதம் !

இயந்திர கோலாறு காரணமாக சுமார் 20,000 PCR சோதனைகள் தாமதம் !


ராகமை போதனா மருத்துவமனையில் புதிதாக நிறுவப்பட்ட ஆய்வகத்திற்கு சொந்தமான பி.சி.ஆர் இயந்திரம் செயலிழந்ததன்காரணமாக கிட்டத்தட்ட 20,000 பி.சி.ஆர் சோதனை முடிவுகள் தாமதமாகிவிட்டதாக அருண செய்தி பத்திரிகை தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு உள்ளிட்ட கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை அமல்படுத்துவதுதொடர்பான முடிவை எடுப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக கொரோனா தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையம் (NOCPC) தெரிவித்துள்ளது.

செயழிலந்த பி.சி.ஆர் இயந்திரம் குறித்த தகவல்கள் நேற்று சுகாதார அதிகாரிகள் மற்றும் கொரோனா தடுப்புக்கான தேசியசெயல்பாட்டு மையம் உறுப்பினர்கள் இடையே நடந்த சந்திப்பின் போது தெரியவந்தது.

மேலும் பி.சி.ஆர் இயந்திரம் ஆசிய அபிவிருத்தி வங்கியின் (ஏடிபி) உதவியுடன் ரூ. 250 மில்லியன்கள் செலவில் மே மாதம் முல்லேரியாதேசிய தொற்று நோய்கள் நிறுவனத்தில் நிறுவப்பட்டதோடு, 06 நாட்களுக்கு முன்பு குறித்த இயந்திரமும் தவராக செயல்பட்டன.

சுகாதார அமைச்சின் அதிகாரிகளுக்கு இந்த பிரச்சினையை உடனடியாக நிவர்த்தி செய்து 48- மணி நேரத்திற்குள் தேவையானநடவடிக்கை எடுக்குமாறு இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அறிவுறுத்தியுள்ளார்.


$ads={2}

உடைந்த பி.சி.ஆர் இயந்திரத்தை சரிசெய்ய சீன அமைப்பைச் சேர்ந்த நிபுணர் ஒருவர் வரவழைக்கப்படவுள்ளார் என்றுதெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவுக்கு விளக்கமளிக்க கொரோனா தடுப்புக்கான தேசியசெயல்பாட்டு மையம் நடவடிக்கை எடுத்துள்ளது.

"எங்கள் தொழில்நுட்ப வல்லுநர்கள் அதை சரிசெய்ய மிகவும் கடினமாக முயன்றனர், ஆனால் முடியவில்லை, நாங்கள் சீனதொழில்நுட்ப அதிகாரியை நாட வேண்டும். அவர் நாளை வரவழைக்கப்படவுள்ளார் ” என இராணுவத் தளபதி சவேந்திர சில்வாதெரிவித்தார்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post