விகாரையில் புகுந்த யானை அட்டகாசம்; குழந்தையொன்று பலி!

விகாரையில் புகுந்த யானை அட்டகாசம்; குழந்தையொன்று பலி!


கருவலகஸ்வெவ, ரஜவிகம விகாரையில் நேற்று (30) மாலை இடம்பெற்ற விசேட பூசை வழிபாடொன்றின் போது காட்டு யானையொன்று புகுந்து அட்டகாசம் புரிந்ததால் குழந்தையொன்று உயிரிழந்துள்ளது.


சம்பவத்தில் நான்கு வயதான ஆண் குழந்தையொன்றே உயிரிழந்துள்ளதென பொலிஸார் தெரிவித்தனர்.


பௌர்ணமி தினத்தன்று குறித்த விகாரையில் இடம்பெற்ற விசேட வழிபாட்டில் குறித்த குழந்தை தனது தாயுடன் அதில் கலந்துகொண்டுள்ளது. இதன்போது காட்டு யானையொன்று விகாரைக்குள் புகுந்து அட்டகாசம் புரியத் தொடங்கியுள்ளது.


$ads={2}


இதன்போது குறித்த குழந்தை அதனது தாயால் கைவிடப்பட்டிருந்த நிலையில் யானையின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளது.


சம்பவத்தில் காயமடைந்துள்ள குழந்தை ஆனமடுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் அதற்கு முன்னரே குழந்தை உயிரிழந்துள்ளது.


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post