விமல் வீரவன்சவின் கருத்துக்கு பதிலடியாக பிரதமர் அலுவலகம் வெளியிட்ட விளக்கம்!

விமல் வீரவன்சவின் கருத்துக்கு பதிலடியாக பிரதமர் அலுவலகம் வெளியிட்ட விளக்கம்!

அண்மையில் இலங்கை வந்திருந்த அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோவை சந்திப்பதற்கு மஹிந்த ராஜபக்ஷ ஆர்வம் காட்டவில்லையென விமல் வீரவன்ச வழங்கியிருந்த விளக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் முகமாக பிரதமர் அலுவலகம் விளக்கம் ஒன்றை வெளியிட்டுள்ளது.


குறுகிய நேர விஜயம் நிமித்தமே இலங்கை வந்திருந்த அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ, சிரேஷ்ட தலைவர் ஒருவரை சந்தித்தால் போதுமானது என்பதே ஏற்பாடு எனவும், அதனடிப்படையில் ஜனாதிபதியுடன் மாத்திரமே சந்திப்புக்கான நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது எனவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.


$ads={2}


தீவிர அமெரிக்க எதிர்ப்பாளராகத் தம்மைக் காட்டிக் கொள்ளும் விமல் வீரவன்ச, பொம்பியோ விஜயத்தின் போது வாயடைத்திருந்த நிலையில், பின்னர் இவ்வாறு விளக்கமளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


-சோனகர்.காம்


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post