கண்டி - கம்பளையில் கொரோனா; அவதானம் நிறைந்த பிரதேசமாக பிரகடனம்!

கண்டி - கம்பளையில் கொரோனா; அவதானம் நிறைந்த பிரதேசமாக பிரகடனம்!


கண்டி - கம்பளை மில்லகாமுல பிரதேசத்தில் கொரோனா தொற்றாளர் ஒருவர் இனம்காணப்பட்டதால் குறித்த பிரதேசம் அவதானம் நிறைந்த பிரதேசமாகப் பிரகடனப்படுத்தப்பட்டு கொனட்டுவெவ கிராமம் இன்று (20) முதல்  முடக்கப்பட்டுள்ளது.


$ads={2}


அங்கு வசிக்கும் 28 குடும்பங்களைச் சேர்ந்த 139 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் குறித்த தொற்றாளர் உணவருந்தியதாக கூறப்படும் கம்பளை நகரில் ஹோட்டல் ஒன்றும் மூடப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.


இதேவேளை, இந்தக் கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை இனங்காணப்பட்ட முதலாவது கொரோனா தொற்றாளர் மாத்தளை லக்கல - பல்லேகம வைத்தியசாலைக்கும் திங்கட்கிழமை  இனம்காணப்பட்ட 36 வயதுடைய கொரோனா தொற்றாளரை மாரவில வைத்தியசாலைக்கும் சிகிச்சைக்காக அனுப்பப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.


முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post