மாகந்துர மதூஷ் சுட்டுக்கொலை; வெடி வைத்தவர்கள் தொடர்பான மேலதிக விபரம் வெளியாகின!

மாகந்துர மதூஷ் சுட்டுக்கொலை; வெடி வைத்தவர்கள் தொடர்பான மேலதிக விபரம் வெளியாகின!


போதைப்பொருள் கடத்தல் காரரும் பாதாள உலகக்குழுத் தலைவருமான மாகந்துர மதூஷ் மீது இன்று (20) அதிகாலை துப்பாக்கி சூடு மேற்கொண்ட சந்தேக நபர்கள் தப்பிச் சென்றிருந்தனர்.


இதன்போது, பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் மோட்டார் சைக்கிளின் கட்டுப்பாட்டை இழந்த சந்தேகநபர்கள் வீதியில் விழுந்தனர்.


குறித்த இடத்திற்கு பொலிஸார் செல்ல முற்பட்ட போதும் சந்தேகநபர்கள் தம்மிடம் இருந்த கைக்குண்டை வெடிக்கச் செய்து அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.


$ads={2}


எவ்வாறாயினும், குறித்த மோட்டார் சைக்கிள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் குறித்த மோட்டார் சைக்கிள் கடந்த மூன்று தினங்களுக்கு முன்னர் வௌ்ளவத்தை பிரதேசத்தில் வைத்து திருடப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.


குறித்த மோட்டார் சைக்கிள் திருடப்படும் காட்சி அருகில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கெமராவில் பதிவாகியிருந்தது.


கருத்து தெரிவிக்க...

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.