பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பாவனைக்கு தடை!

பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பாவனைக்கு தடை!

ஒற்றை பயன்பாட்டு பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் பாவனைக்கான தடையை எதிர்வரும் 2021 ஜனவரி 01ஆம் திகதி முதல் அமல்படுத்தும் திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

உணவு மற்றும் மருந்துக்கு பயன்படுத்தப்படும் 20 மில்லிலீட்டர் அல்லது 20 கிராமுக்கு குறைவான பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் மூலம் செய்யப்பட்ட பொருட்களுக்கு தடை செய்வதற்கு அமைச்சரவையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதற்கு பதிலாக, 100 மில்லிலீட்டர் அல்லது 100 கிராம் அல்லது அதற்கு மேற்பட்ட தொகுப்புகளைப் பயன்படுத்துவதற்கு நேற்று அமைச்சரவையில் அனுமதி வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

பலூன்கள், பந்துகள் மற்றும் மிதக்கும் விளையாட்டுப் பொருட்களைத் தவிர, பிளாஸ்டிக் மூலம் செய்யப்பட்ட பல்வேறு விளையாட்டு பொருட்களை தடை செய்வதற்கும், மாற்றாக சுற்றுச்சூழல் மற்றும் சுகாதார மூலப்பொருட்களைப் பயன்படுத்துவதற்கும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

$ads={2}கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post