பாராளுமன்ற புலனாய்வுத் துறையுடன் இணைக்கப்பட்ட சப் இன்ஸ்பெக்டர் ஒருவருக்கு தொற்று உறுதி!!

பாராளுமன்ற புலனாய்வுத் துறையுடன் இணைக்கப்பட்ட சப் இன்ஸ்பெக்டர் ஒருவருக்கு தொற்று உறுதி!!

பாராளுமன்ற புலனாய்வுத் துறையுடன் இணைக்கப்பட்ட சப் இன்ஸ்பெக்டர் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளதாக சார்ஜென்ட்-அட்-ஆர்ம்ஸ் நரேந்திர பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் உள்ள பொலிஸ் கேண்டீனுக்கு மீன் வாங்க சப்-இன்ஸ்பெக்டர் பேலியகொட மீன் சந்தைக்குச் சென்றதை அடுத்து அவருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் எனும் சந்தேகத்தில் பேரில் மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனையை அடுத்து தொற்றுக்கு உறுதி செய்யப்பட்டார்.

$ads={2}

பின்னர், அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த 07 பேர் PCR பரிசோதனைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் கூறினார்.

மேலும் இந்த பொலிஸ் அதிகாரிக்கு பாராளுமன்ற வளாகத்துடன் நேரடி தொடர்பு இல்லை என்று சார்ஜென்ட்-அட்-ஆர்ம்ஸ் நரேந்திர பெர்னாண்டோ சுட்டிக்காட்டினார்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post