ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வின் வழக்கு பிற்போடப்பட்டது!

ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வின் வழக்கு பிற்போடப்பட்டது!


மனித உரிமைகள் சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பான வழக்கு விசாரணை 2021 பெப்ரவரி மாதத்துக்கு பிற்போடப்பட்டுள்ளது.


2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலில் தொடர்புக்கொண்டிருந்தார் என்ற குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.


இந்த வழக்கு இன்று (28) கோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.


$ads={2}


இதன்போது கொரோனா பரவல் காரணமாக வழக்கு விசாரணையை நீதிவான் 2021 பெப்ரவரி 24ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.


ஹிஸ்புல்லாஹ் 2020 ஏப்ரல் 14ஆம் திகதியில் இருந்து குற்றப்புலனாய்வுத்துறையின் தலைமையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். மேலும் அவரின் சட்டத்தரணிகள் மற்றும் குடும்பத்துக்கு அவரை பார்ப்பதில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.


சட்டத்தரணி ஹிஸ்புல்லாஹ் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் அண்மையில் சர்வதேச மன்னிப்புச்சபையும் கேள்வி எழுப்பியிருந்தது.


அத்துடன் சுமார் 150 சட்டத்தரணிகளும் இது சட்டவிரோத தடுத்துவைப்பு என்று குற்றம் சுமத்தி சட்டத்தரணிகள் சம்மேளனத்துக்கு முறைப்பாடு ஒன்றை செய்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post