ரிஷாட் பதியுதீத்துடன் தொடர்புடைய பலர் கைது! முழு விபரம்!

ரிஷாட் பதியுதீத்துடன் தொடர்புடைய பலர் கைது! முழு விபரம்!


கடந்த அரசாங்கத்தின் போது செயற்பட்ட இடம்பெயர்ந்தோரை மீள பதிவு செய்யும் வேலைத்திட்டத்தின் கணக்காளர் அலகரத்னம் மனோரஞ்சன் நேற்று (13) குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார்.


கிருலப்பனை பகுதியில் வைத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலின் போது இடம்பெயர்தோரை புத்தளத்தில் இருந்து சிலாவத்துறை வரையில் 221 இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகள் மூலம் அழைத்து சென்றதன் ஊடாக இவருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.


$ads={2}


இதேவேளை பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் பாதுகாப்பு அதிகாரி செயற்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் வெள்ளவத்த பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.


மேலும் சற்றுமுன்னர், பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டு வாகன சாரதிகள் இருவர் கைது செய்யப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.


முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post