கம்பஹா மாவட்டம் முழுமையாக முடக்கப்பட்டமை தொடர்பில் நற்செய்தி!!

கம்பஹா மாவட்டம் முழுமையாக முடக்கப்பட்டமை தொடர்பில் நற்செய்தி!!


முழு கம்பஹா மாவட்டத்திற்கும் ஊரடங்கு உத்தரவு விதித்தமை கொரோனா பரவுவதைக் கட்டுப்படுத்த உதவும் என்று சுகாதாரத் துறைநம்பிக்கை தெரிவித்துள்ளது. சுகாதார அமைச்சில் நடைபெற்ற கலந்துரையாடலில் மருத்துவ அதிகாரிகள் இதை தெரிவித்ததாக சுகாதார வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


$ads={2}

முழு மாவட்டத்திலும் ஊரடங்கு உத்தரவு விதிப்பது நன்மை பயக்கிறதா என்று சுகாதார அமைச்சர் விசாரித்ததாக தெரிவிக்கப்படுகிறது. ஒவ்வொரு பொலிஸ் பகுதியிலும் ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டபோது, ​​ஊரடங்கு உத்தரவு இல்லாதபகுதிகளிலிருந்து சிலர் அந்த பகுதிகளுக்கு வந்ததாக மருத்துவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இருப்பினும், முழு மாவட்டத்திற்கும் ஊர்டங்கு உத்தரவு விதிக்கப்பட்டதிலிருந்து நிலைமை மாறிவிட்டதாகவும், இது மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த உதவியது என்றும் சுகாதார அதிகாரிகள் நம்புகின்றனர்.

மேல் மாகாணத்தில் ஊரடங்கு உத்தரவு விதித்தமையிலிருந்து சில நன்மைகளை ஏற்படுத்தும் என்று மருத்துவ அதிகாரிகள்நம்புகின்றனர்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post