ஜனாதிபதியில் உத்தரவை மீறிய சபாநாயகர்; உறவினர்கள் அலுவலக பணிகளில் குவிப்பு!!

ஜனாதிபதியில் உத்தரவை மீறிய சபாநாயகர்; உறவினர்கள் அலுவலக பணிகளில் குவிப்பு!!


சபாநாயகர் மகிந்த யாபா அபேவர்தன நெருங்கிய தனது உறவினர்களை தனது அலுவலக பணியாளர்களாக நியமித்துள்ளதாக ஆதாரத்துடன் சிங்கள பத்திரிகை ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.


ஏற்கனவே தமது நெருங்கிய உறவினர்களை தனிப்பட்ட பணியாளர்களாக அரச அதிகாரிகள் நியமிக்கக் கூடாது என ஜனாதிபதி உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


எனினும் ஜனாதிபதி கோட்டாபயவின் உத்தரவை சபாநாயகர் கடுமையாக மீறியுள்ளதாகவும் அந்தப்பத்திரிகை தெரிவித்துள்ளது.


$ads={2}


இதன்படி தனிப்பட்ட செயலாளராக சகோதரனான வசந்த யாபா அபேவர்தன, ஊடக செயலாளராக மற்றுமொரு சகோதரனான சரத் யாபா அபேவர்தன, இணைப்பு செயலாளர்களாக இருவர் நியமனம் பெற்றுள்ளனர். 


அவர்களில் ஒருவர் சகோதரனான இந்துனில் யாபா அபேவர்தன, மற்றும் மகனான சமீர யாபா அபேவர்தன, பொதுமக்கள் தொடர்பு அதிகாரியாக மருமகனான பிரமானந்த கோமசரு என்பவர்களை சபாநாயகர் நியமித்துள்ளதாக அந்தப்பத்திரிகை மேலும் தெரிவித்துள்ளது.
கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post